ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு (IFHRMS) என்பது முழுக்க முழுக்க ஒரு அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்தே ஆகும். மேலும் இதை பற்றி இன்னும் தெளிவாக பார்க்கலாம் மற்றும் எவ்வாறு login செய்வது என்றும் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் IFHRMS-ன் இதனுடைய முழு விரிவாக்கம் Integrated Financial Human Resource Management System என்பதாகும். இந்த அமைப்பு இந்தியாவில் தமிழக அரசால் அமைக்கப்பட்டதாகும். இதில் மொத்தம் மூன்று நிலைகள் உள்ளது. இதை முதலில் தூங்குபவர் Initiator என்று அழைக்கப்படுவார். இந்த வேலையை Initiators-கள் செய்வார்கள். இரண்டாவதாக கண்காணிப்பாளர் (Verifyer) இவர் Initiator செய்த வேலையை ஆய்வு செய்து எந்த initiator செய்த வேலை என்று கண்காணிப்பார். மூன்றாவதாக அனுமதி வழங்குபவர் (Approver) அல்லது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் Initiator மற்றும் Verifyer செய்த வேலையை தெளிவாக ஆய்வு செய்து கருவூலத்திற்கு அனுப்பும் வேலையை இவர் மேற்கொள்வார்.
இந்தத் திட்டத்தின் பயன் மிகவும் பாதுகாப்பானது ஏனென்றால் இது முழுக்க முழுக்க கணினி வழியாக மட்டுமே செய்ய முடியும் அதுவும் URL எண் IP Address-ஐ மட்டும் பயன்படுத்தி செயல்படும். IP address என்பது Internet Protocol address இதை வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும் வேறு யாரும் பயன்படுத்த முடியாது அந்தந்த அலுவலகத்தில் மட்டும் பயன்படுத்த முடியும். இந்த IFHRMS-ல் Salary slip எளிதாக போட்டு முடித்து விடலாம், salary slip போட்டோ உடனே token number மற்றும் ECS number வந்துவிடும். இதனால் அடிக்கடி அலுவலகத்திற்கு சென்று ECS ஆகிவிட்டதா என்று சரி பார்க்கும் அவசியமில்லை. கருவூலத்திற்கு பணம் கொடுத்து சரிபார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. எனவே லஞ்சம் தவிர்க்கப்படுகிறது. நாம் EPF-ல் Employee share-ஐ எடுப்பதற்கு அப்ளை செய்து விட்டு மாதக்கணக்கில் காத்துக் கொண்டிருப்போம். ஆனால் இதில் Bill போட்ட உடனே token number வந்துவிடும் EPF amount-ம் சீக்கிரம் வந்துவிடும். இது முழுக்க முழுக்க அரசு பணியாளர்களுக்கு பணப்பயன் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது இதனால் அரசு ஊழியர்கள் எந்தவிதமான கவலையும் இன்றி வேலை பார்க்கலாம்.
IFHRMS Login செய்வது எப்படி? (ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு)
- முதலில் ஏதாவது ஒரு Internet வசதி உள்ள Browser-ஐ Open செய்து கொள்ளவும்.
- அதில் உள்ள Search Box-ல் IFHRMS என்று Type செய்து Search செய்து கொள்ளவும்.
- Search செய்த பிறகு வரும் முதல் Link-கான karuvoolam.tn.gov.in என்ற இணையதள முகவரியை அழுத்தவும்.
- அடுத்த பக்கத்தில் கீழே உள்ள Advanced என்ற option-ஐ அழுத்தவும்.
- அடுத்த பக்கத்தில் proceed to www.karuvoolam.tn.gov.in என்ற option-ஐ அழுத்தவும்.
- இப்பொழுது உங்களுக்கான IFHRMS-னுடைய இணையத்தளமானது Open ஆகிவிடும்.
- இந்த பக்கத்தில் மேலே உள்ள Sign in option-ஐ அழுத்தவும்.
- இதில் உங்களுடைய User ID மற்றும் Password போன்றவற்றை உள்ளிட்டு Sign in open-ஐ அழுத்தவும்.
- அடுத்த பக்கத்தில் கீழே உள்ள Advanced என்ற option-ஐ அழுத்தவும்.
- அடுத்த பக்கத்தில் proceed to www.karuvoolam.tn.gov.in என்ற option-ஐ அழுத்தியவுடன் Continue என்ற option-ஐ அழுத்தவும்.
- Continue கொடுத்த பிறகு உங்களுடைய Login முடிந்து விடும்.
- இப்பொழுது Sign in Option இருந்த இடத்தில் உங்களுடைய Details Register ஆகி இருக்கும்.
IFHRMS கட்டண சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? (ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு)
(Integrated Financial and Human Resource Management System)
- இப்போது இந்த பக்கத்தில் உள்ள Report என்ற Option-ஐ அழுத்திக் கொள்ளவும்.
- அழுத்திய பிறகு அடுத்த பக்கத்தில் scroll செய்தால் select month என்ற Option-ஐ அழுத்தவும்.
- அதை அழுத்திய பிறகு உங்களுக்கு எந்த மாதத்தின் உடைய கட்டண சீட்டு (Pay Slip) வேண்டுமோ அந்த மாதத்தை தேர்ந்தெடுத்து ‘Go’ என்ற Option-ஐ அழுத்திக் கொள்ளவும்.
- இப்பொழுது அடுத்த பக்கத்தில் உங்களுடைய கட்டண சீட்டு(Pay Slip) வந்துவிடும் அதை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த பிறகு அந்த File-ஐ Open செய்து போது Password கேட்கும்.
- Password உங்கள் பிறந்த தேதி வடிவில் இருக்கும். உதாரணமாக உங்கள் பிறந்த தேதி 03/05/2001 (DD/MM/YYYY) என்ற வடிவில் இருக்கும்.
- இவ்வாறு உங்களுடைய Password-ஐ கொடுத்து கட்டண சீட்டை (Salary Slip) Open செய்து பார்த்துக் கொள்ளலாம்.