பொதுவாக இ-சேவை மையம் என்பது தமிழ்நாடு அரசு வழங்கும் ஒரு ஆன்லைன் சேவையாகும். இந்த சேவையானது பொது பயன்பாட்டிற்கும் நிர்வாக செயல்பாட்டிற்கும் உள்ளிட்ட பல சேவைகளை ஆன்லைனில் பதிவு செய்ய மற்றும் முடிப்பதற்கு பயன்படுகிறது.
பயன்பாடுகளும் நன்மைகளும்
- உதாரணமாக நாம் பார்த்தால் சான்றிதழ்களை விண்ணப்பித்தல், ரசிது(Bill) செலுத்துதல், போன்ற அரசுடன் தொடர்புடைய இன்னும் பல சேவைகளை பெறமுடிகிறது. இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் நிறைய இருக்கிறது.
- வீண் அலைச்சல் இல்லை வீட்டில் இருந்து கூட இந்த சேவையை பெற முடியும்.
- நேர்மும் அதிகமாக மிச்சமாகும்.
- ஊழல் மற்றும் லஞ்சம் போன்றவை குறையும்.
- சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை எளிதாக பெறமுடியும்.
- கட்டணம்(fee’s) குறைவு மற்றும் பயண செலவும் குறைவு என்பதால் பணத்தை சேமிக்கலாம்.
- ஓரே இடத்தில் இருந்து எளிதாக நிர்வாகம் செய்ய முடியும்.
- 24/7 எந்த நேரத்திலும் இந்த சேவையை பெற முடியும்.
- ஆவணத்தை பதிவு செய்தல் மற்றும் காகிதத்தின் பயன்பாடுகள் குறையும் என்று இதனால் பல நன்மைகள் நமக்கு உண்டு.
இ-சேவை விண்ணப்பத்தின் நிலையை சரிபார்ப்பது எப்படி?
- உங்களுடைய விண்ணப்பத்தை சரிபார்க்க மூன்று முறைகள் உள்ளன.
- முதல் முறை உங்களிடம் இணைய வசதி இல்லை என்றால் எஸ்எம்எஸ் (SMS) மூலம் 155205 என்ற எண்ணிற்கு உங்களுடைய விண்ணப்ப எண்ணை எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் அப்படியே அனுப்ப வேண்டும், அவர்கள் உங்களை தொடர்பு கொள்ள சிறிது காலதாமதம் ஆகலாம்.
- இரண்டாவது முறை https://tnedistrict.tn.gov.in/ என்ற இணையதளத்தை open செய்து உங்களுடைய விண்ணப்ப எண்ணை எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் அப்படியே Type செய்து Search செய்தால் உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த process ஆனது 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ளலாம். Process அனைத்தும் முடிந்தபின் உங்களுடைய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை எளிதாக Download செய்து கொள்ளலாம்.
- மூன்றாம் முறையாக உங்களிடம் User ID இருந்தால் TN E-Sevai இணையதளத்தில் Enter செய்து Login செய்து கொள்ளலாம். அதன் பிறகு அடுத்த பக்கத்தில் Check Status என்ற option-ஐ அழுத்தி உங்களுடைய விண்ணப்ப எண்ணை எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் அப்படியே Enter செய்ய வேண்டும். இந்த முறையின் மூலம் உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை சரிபார்ப்பது கொள்ள முடியும்.