விரிவான நிலத் தகவல் இணையம் பயன்படுத்துவது எப்படி?

விரிவான நிலத் தகவல் இணையம் (CLIP) என்பது தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட ஒரு இணையதளமாகும். இது பொதுமக்களுக்கு விரிவான தகவலை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது நம் நிலம் சம்பந்தப்பட்ட ஒரு சில Document-ஐ ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதற்கு பயன்படுகிறது. நாம் இந்த இணையதள சேவையை பயன்படுத்தி ஒரு நிலத்தின் FMB, EC, PATTA, வழக்குகள், வரி விவரங்கள் போன்ற அனைத்தும் இந்த ஒரே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

விரிவான நிலத் தகவல் இணையம்

விரிவான நிலத் தகவல் இணையம் பயன்படுத்துவது எப்படி?

  • www.clip.tn.gov.in என்று ஏதாவது ஒரு browser-ல் search செய்யவும்.
  • Search செய்த பிறகு முதலில் வரும் comprehensive land information portal (CLIP) link-ஐ click செய்து open செய்து கொள்ளவும்.
  • இந்த வெப்சைட் open ஆகும் போது ஆங்கிலத்தில் இருக்கும், உங்களுக்கு தமிழில் வேண்டுமென்றால் right side top-ல் language மாற்றி அமைக்கக்கூடிய option இருக்கும் நீங்கள் உங்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • இப்பொழுது அந்த Page-ல் நிறைய options இருக்கும், மொத்தம் 12 options இருக்கும் நமக்கு தேவையானதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    1. தமிழ் நிலம் (கிராமப்புறம்) (Land records rural).
    2. தமிழ் நிலம் (நகர்புறம்) (Land records urban).
    3. புல கணக்கெடுப்பு புத்தகம் ( Field measurement book).
    4. வருவாய் நீதிமன்ற வழக்குகள் (Revenue court case data).
    5. சிவில் நீதிமன்ற வழக்குகள் தரவு (Civil court cases data).
    6. ஒருங்கிணைந்த நில தேடல் (Integrated land search).
    7. அடங்கல் பயிர் மேலாண்மை அமைப்பு (E- Adangal crop management system).
    8. பதிவு துறை (Registration department).
    9. சொத்து வரி விவரங்கள் (Property tax details).
    10. குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள் (Water tax payment details).
    11. மின்சார கட்டணம் மற்றும் நிலுவைத் தொகை (Electricity bill payment details).
    12. பாதுகாப்பு விவரங்கள் (securitization details). 13‌. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (Tamil Nadu water supply and drainage board).
  • மேல் உள்ள இந்த சேவைகளை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான document-களை பதிவிறக்கம் செய்யவும் அல்லது சரி பார்த்துக் கொள்ளவும் முடியும்.
  • இந்த இணையதள சேவையை பயன்படுத்தி ஒரு நிலத்தின் FMB, EC, PATTA, வழக்குகள், வரி விவரங்கள் போன்றவை அனைத்தும் இந்த ஒரே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.