உங்களுடைய EMIS எண்ணை கண்டு பிடிப்பது எப்படி? (கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு)

EMIS எண் என்பது கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (Education Management Information System) ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் கல்வி நிறுவனத்திற்கும் வழங்கக்கூடிய ஒரு தனி பட்ட எண்  ஆகும்‌.

EMIS எண்ணை கண்டு பிடிப்பது எப்படி

EMIS என்பது பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் போன்ற பள்ளி மற்றும் கல்வி நிறுவனத்திற்கு தொடர்பான சேமிக்க, தரவுகளை சேகரிக்க, மேலாண்மை செய்ய மற்றும் பகுப்பாய்வு செய்ய கல்வி அதிகாரிகள் பயன்படுத்தும் ஒரு அமைப்பு ஆகும். EMIS எண் என்பது ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்வி நிறுவனத்திற்கும் தனிப்பட்ட தகவல்களைப் பதிவு செய்து மேலாண்மை செய்ய பயன்படுகிறது. மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி சேர்க்கையின் போது முக்கியமாக கேட்கப்படுபவைகளில் இந்த EMIS எண்ணும் ஒன்று. இந்த EMIS எண்ணை வைத்து மாணவர்களின் விவரங்களை பெற முடியும். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் இந்த எண் வழங்கப்படும். மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கையின் போது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இல்லாத போது TC வழங்காத போதும் இந்த EMIS எண் பயன்படும். இந்த EMIS எண்ணை மொபைல் போன் மூலமாகவே மாணவர்கள் கண்டுபிடிக்கலாம்.

உங்களுடைய EMIS எண்ணை கண்டு பிடிப்பது எப்படி?

  1. இந்த EMIS எண்ணாது உங்களுடைய மதிப்பெண் சான்றிதழிலேயே இருக்கும்‌.
  2. அப்படி இல்லையென்றால் கிழே உள்ள இந்த முறையை பின்பற்றவும்.
  3. நீங்கள் படித்த பள்ளியில் Username மற்றும் Password-ஐ வைத்து பயன்படுத்துவார்கள்.
  4. இந்த User name மற்றும் Password உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
  5. அப்படி தெரிந்தால் நீங்களே உங்களுடைய EMIS எண்ணை தெரிந்து கொள்ளலாம்.
  6. நீங்கள் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர் என்றால் உங்களுடைய ID Card-ல் இந்த எண் கொடுக்க பட்டிருக்கும்.
  7. நீங்கள் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர் என்றால் உங்களுடைய EMIS எண் ID Card – ல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
  8. நீங்கள் பயின்ற பள்ளியில் தலைமையாசிரியரிடம் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்.
  9. https://www.pudhumaipenn.tn.gov.in/emis_screen.php என்ற‌ இணையதளத்தின் மூலம் உங்களுடைய EMIS எண்ணை பெற்று கொள்ளலாம்.
  10. மேலே உள்ள இந்த இணையதள Link-ஐ அழுத்தவும்.
  11. இந்த இணைய தளம் Open ஆன பிறகு அதே பக்கத்தில் “KNOW YOUR EMIS” என்ற Option இருக்கும்.
  12. “KNOW YOUR EMIS” என்ற Option-ஐ அழுத்தி அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
  13. KNOW YOUR EMIS ID என்று இருக்கும், அதற்கு கிழே சில விபரங்களை கொடுக்க வேண்டும்.
  14. முதலில் உங்களுடைய மாவட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  15. இரண்டாவதாக உங்களுடைய Block-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
  16. மூன்றாவதாக உங்களுடைய Last Studied School-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
  17. நான்காவதாக ஆதார் எண்ணை Type செய்ய வேண்டும்.
  18. ஐந்தாவதாக உங்கள் பெயரை Type செய்ய வேண்டும்.
  19. ஆறாவதாக உங்களுடைய பிறந்த தேதியை Type செய்ய வேண்டும்.
  20. இவை அனைத்தும் செய்த பிறகு Search Option – ஐ அழுத்தி Search செய்தால் உங்களுடைய EMIS எண் கிடைக்கும்.