பட்டா மற்றும் சிட்டா ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

விரிவான நிலத் தகவல் இணையம் (CLIP) என்பது தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட ஒரு இணையதளமாகும். இது பொதுமக்களுக்கு விரிவான தகவலை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது நம் நிலம் சம்பந்தப்பட்ட ஒரு சில Document-ஐ ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதற்கு பயன்படுகிறது. நாம் இந்த இணையதள சேவையை பயன்படுத்தி ஒரு நிலத்தின் FMB, EC, PATTA, CHITTA, வழக்குகள், வரி விவரங்கள் போன்ற அனைத்தும் இந்த ஒரே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

patta chitta download

பட்டா மற்றும் சிட்டாவை பதிவிறக்கம் செய்யும் முறைகள்

Methods Of Downloading PATTA And CHITTA

  1. www.clip.tn.gov.in என்று ஏதாவது ஒரு browser-ல் search செய்யவும்.
  2. Search செய்த பிறகு முதலில் வரும் comprehensive land information portal (CLIP) link-ஐ click செய்து open செய்து கொள்ளவும்.
  3. இந்த வெப்சைட் open ஆகும் போது ஆங்கிலத்தில் இருக்கும், உங்களுக்கு தமிழில் வேண்டுமென்றால் right side top-ல் language மாற்றி அமைக்கக்கூடிய option இருக்கும் நீங்கள் உங்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
  4. இப்பொழுது அந்த Page-ல் நிறைய options இருக்கும், மொத்தம் 12 options இருக்கும் நமக்கு தேவையானதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  5. இந்த இணையதளமானது தமிழ்நாட்டில் உள்ள நிலங்களின் பட்டா மற்றும் சிட்டாவை பதிவிறக்கம் பயன்படுகிறது. இது வேறு எந்த மாநிலத்திற்கும் பொருந்தாது.
  6. பட்டா மற்றும் சிட்டாவை பதிவிறக்கம் செய்ய நமக்கு தேவையானது கிழே உள்ள Options தான்,
    1. தமிழ் நிலம் (கிராமப்புறம்) (Land records rural).
    2. தமிழ் நிலம் (நகர்புறம்) (Land records urban)
  7. உங்கள் பட்டா அல்லது சிட்டாவை பதிவிறக்கம் செய்ய, நீங்கள் வசிக்கும் பகுதி கிராமப்புறம் என்றால் முதலில் உள்ள தமிழ் நிலம் (கிராமப்புறம்) (Land records rural). இந்த ஆப்ஷனை கிளிக் செய்யவும்‌ அல்லது நீங்கள் வசிக்கும் பகுதி நகர்ப்புறம் என்றால் தமிழ் நிலம் (நகர்புறம்) (Land records urban) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  8. அதைத் தேர்ந்தெடுத்த பிறகு அடுத்த பக்கத்தில் உங்களுடைய நிலம் சம்பந்தமான சில விபரங்கள் கொடுக்க வேண்டும்
  9. முதலில் உங்களுடைய மாவட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  10. அதன் பிறகு உங்களுடைய வட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  11. அதன் பிறகு உங்களுடைய கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  12. அதன் பிறகு பட்டா மற்றும் சிட்டா ஆகியவற்றின் விவரங்களை தெரிந்து கொள்ள மூன்று ஆப்ஷன்ஸ் இருக்கும். பட்டா எண், புல எண், பெயர் வாரியான தேடல் என மூன்று ஆப்ஷன் இருக்கும். இதில் தமக்குத் தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளவும்.
  13. அதன் பிறகு நிலவகையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஊரகம் என்றால் ஊரகத்தை தேர்வு செய்யவும் அல்லது நத்தம் என்றால் நத்தத்தை தேர்வு செய்யவும்.
  14. அதன் பிறகு உட்பிரிவு என்னை அதில் உள்ளிடவும்.
  15. கடைசியாக அங்கீகார மதிப்பை பார்த்து உள்ளிடவும்.
  16. இவை அனைத்தும் செய்த பிறகு கடைசியாக உள்ள “சமர்ப்பி” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து சமர்ப்பித்து கொள்ளவும்.
  17. இவை அனைத்தையும் சரியாக செய்து சமர்ப்பித்த பிறகு உங்களுடைய பட்டா அல்லது சிட்டா வந்துவிடும்.
  18. உங்களுக்கு தேவைப்பட்டால் கீழே நடுவில் இருக்கும் “Print” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *