தமிழக பள்ளி மொழி ஆய்வக இணையதளம் உள்நுழைவு

மொழிகள் இணையதளம் முழுக்க முழுக்க அரசு பள்ளிகளின் பயிலும் எளிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இது தமிழக பள்ளிக் கல்வித் துறையால் உருவாக்கப்பட்டது. இதில் மாணவர்கள் தமிழ் ஆங்கில மொழிகளை எளிமையாக கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மொழி ஆய்வக இணையதளம் உள்நுழைவு

தமிழகத்தில் அரசு பள்ளியில் பையனும் எளிய மாணவர்களுக்காக இந்த மொழிகள் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கணினி மற்றும் கைபேசி போன்ற சாதனங்களை வாங்க இயலாத எளிய மாணவர்களுக்காக அனைத்து தமிழக அரசு பள்ளியிலும் கணினி மூலம் இந்த மொழிகள் இணையதளத்தை பயன்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் எளிமையாக ஆங்கிலம் கற்றுக் கொடுக்க முடியும். இதை பயன்படுத்திய அனைத்து மாணவர்களும் மிகவும் எளிமையாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்கள். மாணவர்கள் இந்த கணினி இணையதளத்தை உபயோகிக்கும் போது ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதினால் அவர்களுடைய திறன், அறிவு போன்றவை மேம்படும். இந்த இணையதளத்தில் அவர்களுக்கு புரியும் விதத்தில் விளையாட்டு மூலமாகவே கற்பித்துக் கொண்டு வருகிறார்கள். இந்த இணையதளத்தின் மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுடைய கல்வி அறிவை மேம்படுத்திக் கொள்ள முடியும். மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் கற்பித்து அதற்கு ஒரு சில புள்ளிகளும் வழங்கி மாணவர்களை மேலும் மேலும் கற்பதற்கு ஊக்குவிக்கிறது. இந்த இணையதளம் பாட நூல்கள், வீடியோ பாடங்கள், மதிப்பீடுகள் மற்றும் பல வளங்களை தமிழில் கொண்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பல பாடங்களை இது கொண்டுள்ளது. மாணவர்களின் புரிதல் திறனை மேம்படுத்துவதற்காக வீடியோ பாடங்களையும் கொண்டுள்ளது. ஆன்லைனில் மூலம் கேள்வி கேட்டு மதிப்பீடு அளிக்கிறது. மாணவர்களுக்காக மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் உதவியாக இருக்கிறது எவ்வாறு பாடம் கற்பிக்க வேண்டும்? மாணவர்களுக்கு எப்படி கற்பித்தால் புரியும்? போன்ற கற்றல் வழிகாட்டிகளை இது வழங்குகிறது.

உள்நுழைவு (Login)

  1. மொழிகள் இணையதளத்தை www.mozhigal.tnschools.gov.in திறக்கவும்.
  2. மெனு ஆப்ஷனை கிளிக் செய்யவும், அதில் கடைசியாக Sign in என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும்.
  3. அதை கிளிக் செய்த பிறகு உங்களுடைய “EMIS ID” மற்றும் “EMIS Password” ஆகிய இரண்டையும் அதில் Enter செய்து Login செய்து கொள்ளலாம்.
  4. உங்களுடைய Password மறந்துவிட்டது என்றால் அதில் உள்ள “Forgot your EMIS ID or EMIS password?” என்ற ஆப்ஷனில் உள்ள Box-ல் Tap செய்து கொள்ளவும்.
  5. பிறகு கீழே வரும் “Continue as Guest” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  6. உங்களுக்கு “Login” செய்வது தெரியவில்லை என்றால் கீழே கடைசியாக இருக்கும் “Need help with Login?” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோ மூலம் “Login” செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள முடியும்.

பயன்படுத்தும் முறை (Methods Of Uses)

  • மொழிகள் இணையதளத்தை (https://mozhigal.tnschools.gov.in/home) திறக்கவும்.
  • ‘மெனுவில்’ கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு அல்லது மாணவர்களுக்கு தேவையான பகுதியை தேர்ந்தெடுக்கலாம்.
  • “பாடநூல்கள்” பகுதிக்கு சென்று உங்கள் வகுப்பு பாடத்திற்கு ஏற்ப பாடநூல்களை கற்கவும் பதிவிறக்கம் செய்யலாம்.
  • வீடியோ பாடம் பகுதிக்கு சென்று உங்களுக்கு தேவையான பாடத்தை வீடியோ மூலம் கற்றுக் கொண்டு உங்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தலாம்.
  • மதிப்பீடு பகுதிக்கு சென்று ஆன்லைன் மதிப்பீடுகளை செய்யவும், பயிற்சி கேள்விகளை தேர்ந்தெடுத்து உங்களுடைய நிலையை மதிப்பீடு மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
  • ஆசிரியர்களுக்கான பயன்கள் பக்கத்திற்கு செல்லவும், பாடத்திட்டங்கள், கற்பிப்பதற்கான உதவிகள் மற்றும் வகுப்புக்கான வழிகாட்டிகளை பெற முடியும்.
  • தேவைப்பட்டால், இணையதளத்தில் தொகுப்பாளர் அல்லது தொகுப்பாளர் பகுதிக்கு சென்று உதவி பெறலாம்.
  • இந்த முறைகளை பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய கல்வி அறிவை மேம்படுத்த முடியும்.