உயர் கல்வி படிக்கும் எல்லா மாணவர்களின் விவரங்களை இந்த இணைய முகப்பில் தான் பதிவு செய்கிறார்கள். இதை நீங்கள் படிக்கும் கல்லூரியில் இருந்து பதிவு செய்கிறார்கள். அப்போது அவர்கள் பதிவு செய்யும் போது 10 இலக்க எண் கிடைக்கும். அப்படி கிடைக்கும் அந்த 10 இலக்க எண்ணை கொண்டு தான் உள்நுழைவு (Login) மற்றும் e-KYC போன்றவற்றை சரிபார்க்க முடியும்.
உள்நுழைவது எப்படி?
- UIMS என்று browser-ல் search பன்னவும்.
- Open ஆன பிறகு Login பட்டனை அழுத்தவும்.
- அடுத்த பக்கத்தில் Username, password, captcha போன்றவற்றை உள்ளிட்டு Login பன்னலாம்.
- Username என்பது உங்கள கல்லூரியில் உங்களுக்கு அளித்த UIMS எண் ஆகும்.
- Password என்பது உங்கள் Register கைபேசியின் கடைசி 4 இலக்க எண்ணும், நீங்கள் ங்கள் பிறந்த வருடமும் சேர்ந்த ஒரு எண் ஆகும். (உதாரணமாக கைபேசி எண்: XXXXXX4321 மற்றும் பிறந்த வருடம்: 1997 என்றால் இரண்டும் சேர்ந்து 43211997 ஆகும்). இதை தெளிவாக தெரிந்தது கொள்ள அதே பக்கத்தில் First Time Student Login என்ற option-ஐ அழுத்தி தெரிந்து கொள்ளலாம்.
- இறுதியாக CAPTCHA code-ஐ பார்த்து enter செய்து Login செய்து கொள்ளலாம்.
- அதன் பின்னர் password-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று ஒரு notification pop-up ஆகும், பழைய Password-ஐ கொடுத்து புதிய password-ஐ மாற்றி அமைக்கலாம்.
- இப்போது மீண்டும் Login செய்ய வேண்டும் மேல் கூறிய முறையில் மீண்டும் Login கொள்ளலாம்.
e-KYC-ஐ பதிவு செய்வது எப்படி?
- Login செய்தபிறகு அடுத்த பக்கத்தில் e-KYC முடிப்பதற்கு ஆதார் எண் கொண்டு முடிக்கலாம்.
- அதற்கு அந்த பக்கத்தில் Proced என்ற Option-ஐ அழுத்தவும்.
- அடுத்த பக்கத்தில் உங்கள் ஆதார் எண் Automatic-காக வந்து விடும், அந்த ஆதார் எண் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கவும்.
- சரியாக இருக்கும் பட்சத்தில் Send OTP என்ற option-ஐ அழுத்தவும்.
- ஆதார் எண்ணுடன் பதிவு செய்த கைபேசிக்கு OTP வந்தவுடன், அதை அந்த பக்கத்தில் Enter செய்து Verify Option-ஐ அழுத்தி verify செய்து கொள்ளலாம்.
- இப்போது e-KYC வெற்றிகரமாக முடிந்து உங்களுக்கு Portal Open ஆகிவிடும்.
- இதில் நீங்கள் உங்கள் விபரங்களை பார்த்து சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம்.
தீர்மானம்
மேல் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையானவை அனைவரும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது , ஏமாற்றும் நோக்கத்துடன் இல்லை.